கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் அஸ்வதி( 20) இவர் அதே பகுதியில் உள்ள பழக் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று மதியம் அஸ்வதி வீட்டில் கழுத்தில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். வெளியில் சென்று திரும்பிய அவரது சகோதரி இதை பார்த்துவிட்டு உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அஸ்வதி உயிர் இழந்தார்.
இதுகுறித்து அவரது சகோதரி ஐஸ்வர்யா சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அஸ்வதி பழக் கடையில் வேலை செய்யும் போது அதே கடையில் வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அந்த பெண்ணின் வீட்டிற்கு அஸ்வதி அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்படி செல்லும் பொழுது அந்த பெண்ணின் கணவருக்கும் அஸ்வதிக்கும்
கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த அவரின் தோழி அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக அந்த தோழி தனது கணவரை பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் பின் அவரது தோழியின் கணவனை அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அஸ்வதி வீட்டுக்கு அவரது கள்ளக்காதலன் வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அஸ்வதி கழுத்தை நெரித்து
கொலை செய்து விட்டு தப்பியிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.













