பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்த்தனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகம் தொழில் துறைகள் மிகுந்த மாநிலமாக உள்ளதால், கரோனா கால முழு பொதுமுடக்கத்தால் மாநிலத்தில் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொழிலாளா்களுக்கு செலுத்துவதற்காக அதிகப்படியான தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.குறிப்பாக 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு செலுத்துவதற்கு தடுப்பூசிகளை அதிக அளவில் வழங்கிட வேண்டியுள்ளது. மேலும், கறுப்புப் பூஞ்சை பாதிப்பும் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளையும் உடனடியாக வழங்கிட வேண்டியுள்ளது.
எனவே,செங்கல்பட்டு ஆலையில் விரைவில் தடுப்பூசி உற்பத்தியைத் துவங்கி, அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













