கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிளெஸி மார்பக நோய் காரணமாக சன்னி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர் தர்ஷன் பிரபாத் சிகிச்சை அளித்து வந்தார். இவரும் இந்தியாவை சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிளெஸியின் உடல்நிலை மோசமடைந்தது. உடனே அவசர அவசரமாக வேறு ஒரு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு சென்ற சில மணி நேரங்களில் பிளெஸி பரிதாபமாக உயிர் இழந்தார். சன்னி மருத்துவமனையில் தன்னுடைய மனைவிக்கு அளித்த அலட்சியமான சிகிச்சையே அவரது மரணத்திற்கு காரணம் என்று ஜோசப் ஆபிரகாம் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இதுபற்றி அவர் ஷார்ஜா நீதிமன்றத்தில் சுமார் ரூ.2 கோடி (1 மில்லியன் திராம்) இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சன்னி மருத்துவமனை மற்றும் அதன் மருத்துவர் தர்ஷன் பிரபாத், ரூ.39 லட்சம் (2 லட்சம் திராம்) இழப்பீடாக உயிர் இழந்த பிளெஸி குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.















