வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி லாரிகள் இயக்குவதை நிறுத்துவதற்கு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் கூட்டி முடிவு எடுத்து முடிவு எடுக்கப் போவதாக அதன் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
டீசல் விலை உயர்வால், போக்குவரத்து துறை சார்ந்தோர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். நாட்டு மக்கள் விலைவாசி உயர்வால் கஷ்டப்படுகின்றனர். அதை மீட்க மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை, ஜி.எஸ்.டி.,க்குள் வைத்து, நாடு முழுதும் ஒரே விலையையும், விலை மாற்றத்தை, ஒரு மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் நிர்ணயிக்க வேண்டும்.
வாகன கடன் தவணைக்கு, ஆறு மாத அவகாசம் வழங்க வேண்டும். ‘இ – வே பில்’ மீதான குளறுபடிகள், போலீஸ், ஆர்.டி.ஓ.,. பிரச்சனைகளுக்கு தீர்வு காண செயற்குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க படும் என அவர் தெரிவித்தார்.