தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கூலையனூரைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 60). விவசாயி. இவரது மனைவி பாரிஜாதம் (50). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி அருகில் வசித்து வருகின்றனர்.
நாகராஜ் மகன் வீட்டில் சாப்பிடாமல் மகள் வீட்டுக்கு சென்று சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.
இது தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் பாரிஜாதத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த பாரிஜாதம் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பாரிஜாதத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமறைவான நாகராஜை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.














