கட்டபொம்மன் புகழை மறைக்க சிலர் முயற்சி: வைகோ குற்றச்சாட்டு

0
995

கட்டபொம்மன் 222ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அவருடன் அவரது மகன் துரை வையாபுரி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதேபோல் பல்வேறு கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் இன்று நினைவு தினத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மதிமுக செயலர் வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘

வீரபாண்டி கட்டபொம்மன் வீரத்தை நடிகர் சிவாஜிகணேசன் நாடகம் மூலமாக வெளிப்படுத்தினார். கயத்தாரில் அவரது சொந்த செலவில் கட்டபொம்மன் சிலையை நிறுவினார்.பின்னர் திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் நான் பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை எழுப்ப வேண்டும் என வலியுறுத்தினேன் அதனைத் தொடர்ந்து கோட்டை எழுப்பப்பட்டது.

கயத்தாறில் ஊமைத்துரையும், கட்டபொம்மனும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைக்கிறேன்.


கட்டபொம்மனின் புகழையும் தியாகத்தையும் மறைப்பதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள் கட்டபொம்மனின் புகழ் என்றைக்கும் நிலைத்திருக்கும் நடிகர் சிவாஜியின் பெயரும் நிலைத்திருக்கும்.

வீரர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது நமக்கு வீரத்தை கொடுக்கும் என்பதனாலேயே நான் ஆண்டுதோறும் வருகிறேன்’ எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here