விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், நிறைமாத கர்ப்பிணியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் குழந்தை பிறந்ததற்கான ஆவணங்கள் பதிவு செய்யும் போது, குழந்தை பெற்ற பெண் 17 வயதுள்ள சிறுமி என்பது தெரிந்தது.
இது குறித்து கோவில்பட்டி அரசு மருத்துவமனை ஊழியர்கள், சாத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சிறுமியின் கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












