இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர் ஆஸ்திரேலிய அணிக்கு சவாலாக விளங்கி வருகிறார்.
இவர் வெஸ்ட் இண்டீஸ் பார்படோஸில் பிறந்தவர். இங்கிலாந்தில் குடியேறியதால் இங்கிலாந்து குடியுரிமை பெற்று, அந்த நாட்டு கிரிக்கெட் அணியில் விளையாட தகுதி பெற்றார்.
தற்போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் ஆர்சர், ஓல்டு டிராபோர்டில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்டில் விளையாடி வருகிறார். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின்போது ஆர்சர் வீரர்கள் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இரண்டு ரசிகர்கள் ஆர்சர், உங்களுடடைய இங்கிலாந்துக்கான பாஸ்போர்ட்-ஐ காட்டுங்கள் என கூச்சலிட்டர்ன.
இதனால் ஆர்சர் கடும் கோபம் அடைந்தார். அவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.