தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தாபுரத்தைச் சேர்ந்த கணேசன் தரப்பினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பீட்டர் என்ற ஜேசுமரியான் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 03.06.2001 அன்று கணேசன் தனது சகோதரர்களான முருகேசன், வயனபெருமாள், ஆதிலிங்கராஜன் ஆகியோருடன் வீட்டருகில் டிரக்கரை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த பீட்டர் அவரது மகன்களான சுதாகர் (47), விஜயேந்திரன், கோபி மற்றும் அவரது உறவினரான குருசமுத்து ஆகியோருடன் சேர்ந்து அரிவாள், இரும்புக் கமபி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர்.
இது சம்பந்தமாக புலன் விசாரணை முடிக்கப்பட்டு, கடந்த 04.09.2001 ல் நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கின் குற்றம்சாட்டப்பட்ட சுதாகர், கைதாகி பிணையில் வெளிவந்த நிலையில், நீதிமன்ற
இதையடுத்து மாவட்ட காவல் நிர்வாகம் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
இன்று தூத்துக்குடி பூபால்ராயபுரத்தில் அவர் போலீசிடம் சிக்கினார்.