நாசரேத் மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கடந்த 30ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்தது.
விழாவை முன்னிட்டு தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை பவனியும், திருப்பலியும் நடந்தது.
9 ஆம் திருவிழா மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை , திருவிழா மாலை ஆராதனை நடந்தது.
சேதுக்குவாய்த்தான் பங்குத்தந்தை பால் ரோமன் தலைமை வகித்து மறையுரை ஆற்றினார். தொடர்ந்து சமபந்தி விருந்து நடந்தது.பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்தினை தொடங்கி வைத்தார். இதில் திரளானோர் பங்கேற்றனர்.
10 ஆம் திருவிழாவின் திருப்பலிக்கு மன்னார்புரம் இளையோர் பணிக்குழு செயலர் சைமன் ஆல்டஸ் தலைமை வகித்து மறையுரை ஆற்றினார்.மாலை 7 மணிக்கு அன்னையின் சப்பர பவனி, நற்கருணை ஆசீர் நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் தலைமையில் மாதாவனம் ஆலய இறை மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.











