தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் ஆளுநராக நேற்று முன்தினம் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டார்.
டெல்லியில் உள்ள தெலுங்கானா ராஜ்பவன் அதிகாரி வேதாந்தகிரி, தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து நியமன ஆணையை வழங்கினார். நியமன ஆணையை பெற்றுக்கொண்ட தமிழிசை வரும் 8 ஆம் தேதி பதவியேற்கிறார்.