அன்றைய பிரதமருக்கு ரோஜா என்றால் இன்றைய பிரதமருக்கு…!!

0
1360

பிரதமர் மோடி 2வது முறையாக பதவியேற்ற பின் நேற்று டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார்.

சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அணியும் ஆடைகளைப் போன்றே அவரது தலைப்பாகைக்கும் சிறப்பு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் அவை உற்று நோக்கப்படுகிறதாம் நடப்பாண்டில் 6வது முறையாக செங்கோட்டையில் கொடியேற்றிய போது அவரது தலைப்பாகையில் மஞ்சள் நிறம் அதிகளவில் இடம் பெற்று இருந்தது. அத்துடன் பச்சை, சிவப்பு நிறங்களும் இடம் பெற்று இருந்தன.

கடந்த 2017ல் உதய்பூரைச் சேர்ந்த கோதாரி சகோதர்களான ஜெயந்த், ஜினேஷ் இருவரும் மோடிக்காக தலைப்பாகை உருவாக்கி இருந்தனர். நான்கு பேர் சேர்ந்து பத்து நாட்கள் இந்த தலைப்பாகையை தயாரித்துள்ளனர். தலைப்பாகையை 54 இஞ்ச் தங்க லேசால் அலங்கரித்துள்ளனர். 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மேவாரைச் சேர்ந்த மகாராணா போபால் சிங் அணிந்திருந்த தலைப்பாகையைப் போன்றே இதையும் தயாரித்து இருந்தது இதன் சிறப்பு.

மறைந்த முன்னாள் பிரதமர் நேரு எப்போதும் தனது சட்டையில் ரோஜா அணிந்து இருப்பார். அதுபோல், சுதந்திர தினம் என்றால், மோடியின் தலைப்பாகை சிறப்பு பெறுவதுடன் பேசவும் வைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here