டிக்கெட் எடுக்காமல் தொணதொணத்த ஏட்டு: கண்டக்டர் அதிர்ச்சி மரணம்

0
1320

விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு சென்ற அரசு பேருந்தில் திட்டக்குடி ஏட்டு பயணம் செய்தார். அவர் சீருடையிலும் இல்லை. டிக்கெட்டும் எடுக்கவில்லை. இதனால் நடத்துநர் அவரிடம் டிக்கெட் எடுக்குமாறு கேட்டார். ஆனால், ‘ போலீஸ்காரனிடமே டிக்கெட் கேட்கிறாயா?’ என்று எரிந்து விழுந்தார் ஏட்டு.
அத்துடன் அமையாமல் சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு தொண, தொணத்துக்கொண்டே வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்த நடத்துநர் மயங்கி விழுந்தார். அவரை நெய்வேலி பெரியகுருசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here