தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியில் கனரா வங்கியுடன் இணைந்த ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம்மில் கடந்த சில மாதங்களாக 100 மற்றும் 200 ரூபாய் பணம் வரவில்லை என வாடிக்கையாளர்களால் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
குறிப்பாக,அவசர தேவைக்கு நூறு ரூபாய் எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டவர்கள் பலர் தவித்து வந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஹென்றி என்ற வாலிபர் ஏடிஎம்முக்கு 100 ரூபாய் பணம் எடுக்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது 100 ரூபாய் வராததால் அங்கு ஊழியர்களிடம் இது குறித்து கேட்க சென்றுள்ளார்.
ஆனால் வங்கி ஊழியர்கள் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹென்றி மீண்டும் ஏடிஎம் அறைக்கு வந்து 100 ரூபாய் வராத ஆத்திரத்தில் தனது முழு பலத்தையும் கூட்டி இயந்திரத்தை அடித்து உடைத்துள்ளார
இதையடுத்து சாத்தான்குளம் போலீசார் ஹென்றியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.