பைக்கில் பறந்த சிறுவர்களை கண்டித்த டிரைவர் எலக்ட்ரீசியனுக்கு அரிவாள் வெட்டு

0
50

*

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் என்ற சைமன். டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த 30ந்தேதி, தெப்பக்குளம் பகுதியில் நடந்து கொண்டிருந்த போது, 17வயது சிறுவன் ஒருவன் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். இதனை ஜெயக்குமார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஜெயக்குமார் மற்றும் எலக்ட்ரிக் சர்வீஸ் கடை நடத்தி வரும் அவரது உறவினரான கதிரேசன் இருவரும் வீட்டில் இருந்த போது, பைக்கினை வேகமாக ஓட்டி வந்த 17வயது சிறுவன் உள்பட 5 சிறுவர்கள் வந்து, 17வயது சிறுவன் பற்றி காவல்நிலையத்தில் புகார் சொன்னது என்று கேட்டு ஜெயக்குமாரிடம் சிறுவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெயக்குமார் தான் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவில்லலை என்ற கூறிய போதும், 5 சிறுவர்கள் கேட்கமால் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, கையில் இருந்த அரிவாளால் ஜெயக்குமாரை தலையில் வெட்டியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற கதிரேசனுக்கும் கையில் வெட்டு விழுந்துள்ளது. இதையெடுத்து சிறுவர்கள் அங்கிருந்த தப்பியோடியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து 5 சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் எட்டயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here