அதிமுக சிறுபான்மை நலப்பிரிவு பொறுப்பாளர் அன்வர் ராஜா, அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தவர். இவர் சமீப காலமாக சசிகலாவுக்கு ஆதரவாக பேசிவந்தார். இதனால் அதிமுக தலைமை இவர் மீது அதிருப்தி கொண்டது.
இந்நிலையில், அதிமுக கட்சி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். கட்சி தலைமை முடிவுக்கு மாறான கருத்துகளை அடிக்கடி கூறிவந்ததால் அவர் நீக்கப்பட்டதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.