கைபேசி சத்தத்தால் பஸ்ஸில் கதறிய பயணி – வேறு பஸ்சுக்கு விரட்டிய நடத்துநர்

0
1174

அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். சமூக சேவகர். அவர் இன்று அதிகாலை 6:30 மணியளவில் அழகிய மண்டபத்தில் இருந்து நாகர்கோவில் செல்ல
வண்டி எண் TN74 N1854ல் பயணம் செய்தார் .

அவர் அருகே இருந்தவரும் பக்கத்தில் இருந்தவர்களும் அந்த அதிகாலை வேளையிலே அதிக சத்தத்துடன் அதிக ஓசையுடன் செல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டும் காணொளி பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். அருள்ராஜ் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர்கள் சத்தத்தை குறைக்கவில்லை.

இதனால் அவர் நடத்துநரிடம் முறையிட்டார். அவரோ இவரையே அவதூறாக பேசி, ‘நான் ஒன்றும் செய்ய முடியாது நீ வேண்டுமானால் வேறு வண்டியில் போ’ என கோபப்பட்டுள்ளார்.

அடுத்து நடந்ததை குறித்து அருள்ராஜ் கூறுகையில்,’ அதனால் வேறு வழியின்றி ஓட்டுனரிடம் வண்டியை நிறுத்தச் சொல்லி குமாரகோவில் நிறுத்த்தில் இறங்கி,
பின்னால் வந்து கொண்டிருந்த கேரளா பஸ்ஸில்ஏறி நாகர்கோவில் வந்தேன்.


இது குறித்து போக்குவரத்து புகார் எண்ணான 149-ல் புகார் தெரிவித்தேன். எந்த பலனும் இல்லாததோடு, புகார் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரியவில்லை. வேறு வழியின்றி முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் செய்ய,’ இது பற்றி இங்கு புகார் செய்ய இயலாது ‘ என்று பதில் வந்தது.
ஒலி மாசு சட்டம் குறித்து அரசு ஊழியர்களுக்கு கூட போதிய விடுப்புணர்வு இல்லாத காரணமாக பொதுப்பணியாக தான் பாதிக்கப்பட்டேன். என் புகார் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here