தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பாட்டில்களின் விற்பனை விலை, சுற்றுச்சூழல் வரி மற்றும் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறைகளில் இன்று முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில் வாங்க மறுத்ததால், மதுபானப் பிரியர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, காலி மது பாட்டில்களை தெருவில் உடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அது மட்டுமின்றி, டாஸ்மாக் கடையை அடைக்க வில்லை என்றால் உடைத்து விடுவோம் என்று மிரட்டியதால் கோவில்பட்டி நகரில் இயங்கி வரும் ஆறு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.
புதிய நடைமுறையின்படி காலி மது பாட்டில்களை ஸ்கேன் செய்து வாங்க வேண்டுமென்று அரசு அறிவுறுத்திய நிலையில், ஸ்கேன் ஆகாததால் வாங்க முடியவில்லை என்று மதுபான ஊழியர்கள் கூறினர்.












