திருச்செந்தூர் – குலசை சாலையில் ஆலந்தழையை அடுத்த சுனாமி குடியிருப்பு அருகே நெடுஞ்சாலையை அண்டி ஓடும் மழைநீர் வடிகாலை மணலால் மூடிக்கொண்டிருக்கிறார்கள்.
புதிய கட்டடங்களை எழுப்புவதற்காக விதிகளை மீறி இவ்வாறு எந்திரங்கள் மூலம் மழைநீர் வடிகாலை மூடுபவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஏற்கனவே கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கை சந்தித்த இப்பகுதியில், நுனி மரத்திலிருந்து கொண்டு அடி மரத்தை வெட்டும் புத்திசாலிகளைப் போல், மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வடிகாலை மூடும் நபர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மீண்டும் வடிகாலை சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.









