தமிழ்நாட்டில் தமிழ் தெய்வங்களுக்கு சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யும் வழக்கம் இருந்து வருகிறது.இதை மாற்றவேண்டும், தமிழிலேயே அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பன்னெடுங்காலமாக இருந்து வந்தது.
தற்போது தமிழ்நாடு அரசு 47 பெரிய கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்துள்ளது சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் அர்ச்சனை தொடங்கி வைக்கப்படுகிறது.










