வருவாய்த்துறை இடத்தில் மரம் வெட்டி கடத்தல் : கைது செய்ய காவல்துறை தயக்கம்

0
196

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாலுகாவுக்கு உட்பட்ட சடையனேரி கிராம பகுதியில் சுமார் 150 ஏக்கர் பிஏசி எல் நிறுவன நிலம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வருவாய்த்துறை இடம் உள்ளது. பிஏசிஎல் நிறுவன மேலாளர் ஒருவர் அதை பராமரித்து வந்தார். ஆனாலும், வருவாய்த்துறை கண்காணிப்பு செய்யாததால் கண்ட நபர்களும் சொந்தம் கொண்டாடி அனுபவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ராமச்சந்திரன் என்பவர் திடீரென்று நிலத்திற்குள் இறங்கி அங்கிருந்த 50 வருடம் நிரம்பிய தேக்கு வேம்பு உள்ளிட்ட பலவகை மரங்களையும் அறுவை இயந்திரம் மூலம் அறுத்து வெட்டி கடத்தி விட்டார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் வருவாய்த் துறையினருக்கு தெரிவித்ததும் வேறு வழியின்றி காவல்துறைக்கு புகார் செய்யப்பட்டது. ஆனால் இன்னமும் அந்த நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தகவல் அளித்த சமூக சேவகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here