சேவியர் காலனியில் சேறும் சகதியும் ஆன சாலை – பாதாள சாக்கடை திட்டத்தின் பரிதாபம்

0
106

நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள சேவியர் காலனிக்கு செல்லும் பிரதான சாலை முழுவதும் பாதாள சாக்கடைக்கு தோண்டி கைவிடப்பட்ட நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறது. சாலைகள் முழுவதும் படு பள்ளங்கள், குண்டு, குழிகள் தோன்றியுள்ளன. சாக்கடையும் மழை நீரும் சேர்ந்து சேறும் சகதியும் ஆக காட்சியளிக்கிறது

பிரதான சாலையை நோக்கியே இரு தேவாலயங்கள் உள்ளன இன்று தேவாலய ஆராதனைக்கு மக்கள் வந்த நிலையில் சாலையில் சென்ற வாகனங்கள் சேறு அடித்ததால் பலரது ஆடைகளும் சேறுபடிந்து அழுக்காகின. சாலையில் செல்லும் இருசக்கர வாகனதாரர்கள் அடிக்கடி வழுக்கி விழவும், குண்டு குழிக்குள் வாகனங்கள் சிக்கிக் கொள்ளவும் நேர் கின்றன எனவே, விரைவில் பாதாள சாக்கடை திட்டத்தை முடித்து சாலையை செப்பனிட வேண்டுமென்று பாரதிய ஜனதா மஸ்தூர் சங்க மண்டல தலைவர் பிரகாஷ், சமூக ஆர்வலர் பிரவீன் பெரியசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here