கடந்த முறை ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளை இணைத்த பாஜக அரசு, இப்போது பிற வங்கிகளை இணைத்து 27ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை 12ஆக குறைத்துள்ளது.
இதனால் உலகளவில் வெளிநாட்டு வங்கிகளுடன் போட்டிப்போடும் சூழ்நிலை உருவாகும் என கூறியுள்ளது. ஆனால், உள்நாட்டில் உள்ள சில தனியார் வங்கிகளுடன் கூட இவற்றால் போட்டியிட முடியவில்லை. ஏனெனில், தனியார் வங்கிகளுக்கு சமூக பொறுப்பு கிடையாது. கல்விக்கடன், விவசாய கடன்களில் கவனம் செலுத்தும் கட்டாயமில்லை.
ஆனால், பொதுத்துறை வங்கிக்கு கிராமப்புர முன்னேற்றம், அடித்தட்டு மக்களின் வளச்சியில் பொறுப்பு உள்ளது.
வங்கிகளை இணைப்பதால் வாடிக்கையாளர்களுக்கு சலுகைக்கு பதில் பாரமே சுமத்தப்பட்டது. கடந்த ஸ்டேட் வங்கி இணைப்புக்கு பின்புதான் கணக்கில் குறைந்த இருப்பொத்தொகை இல்லாவிட்டால் அபராதம், ஏடிஎம்மில் சில தடவைக்கு மேல் எடுத்தால் கட்டணம், வங்கி கணக்கு அறிக்கை கேட்டால் கட்டணம் என்பன போன்ற பணம் பிடுங்கும் நடவடிக்கைகள் தொடங்கின என்கின்றனர் பொருளியல் நிபுணர்கள்.
இதன்மூலம் கடந்த 2017ல் ரூ.1,800 கோடி ரூபாய் ஏழை, நடுத்தர மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது. ஆனால், பணக்காரர்களுக்கும் கார்பரேட்டுகளுக்கும் வழங்கப்பட்ட 93,000 கோடி ரூபாயில் 48,000 கோடி ரூபாய் தவிர மீதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
வங்கியின் நிர்வாக அலுவலகங்கள் மற்ரும் பல வங்கிகளின் கிளைகள் மூடப்படுவதால் பரவலாக வங்கி சேவை கிடைப்பது கடினமாகும்.
கனரக உற்பத்தி துறை தவிர, பிற நடு, சிறு, குறு வணிக நிறுவனங்களுக்கு கடன் பெறும் வாய்ப்பு குறையும். அதாவது, கார்பரேட்டுகளுக்கே கடன் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
கடந்த கால் ஆண்டு ஜிடிபி 5{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} ஆகிவிட்டதாக அரசே அறிவித்துள்ள நிலையில், வேளாண்மை, சிறுதொழில் வளர்ச்சிக்கு நிதியுதவி செய்யாவிட்டால் உற்பத்தி திறன் குன்றிவிடும்.
தற்போதைய வங்கி இணைப்பு பட்டியலில் பெரும்பாலும் வட இந்தியாவிலும், ஓரளவு கர்நாடகாவிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளே இணைக்கப்படுவதால் புவியியல் ரீதியான அனுகூலம் பிற மாநில மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகுறையும்.
லாபம் அதிகம் உள்ள வங்கிகளும், குறைந்த வங்கிகளும் இணைக்கப்படுவது தவளையையும் நண்டையும் இணைத்த கதையாக இருக்கிறது என்கின்றனர்
நிதி ஆலோசகர்கள். 90களின் இறுதியில் அமைக்கப்பட்ட நரசிம்மன் குழு. லாபமில்லாவங்கிகளை மூடிவிட பரிந்துரைத்ததை வேறு விதமாக நடைமுறைப்படுத்துவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதன்மூலம், தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு அடிக்கல் நாட்டுவதாக அவர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.
வங்கிகள் இணைப்பால் ஊழியர்கள் வேலையிழப்பு இருக்காது என அரசு உறுதி கூறினாலும், ஏற்கனவே இருக்கும் 3 இலட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் உத்தரவாதம் இருக்காது என்று உறுதிபட கூறுகின்றனர்.