விளாத்திகுளம் கலவரத்தில் கைதானவர்கள் திருச்சி, மதுரை சிறைகளில் அடைப்பு

0
67

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இலந்தைகுளம்,லெக்கம்பட்டி கிராமங்களை சேர்ந்த இரு தரப்பினர்களிடையே ஏற்பட்ட மோதலில் இரு பிரிவினரும் மாறி மாறி கற்களால் மற்றும் கம்புகளால் தாக்கிக் கொண்டனர்.இதில் 3 போலீசார் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதியை சுற்றி ஏராளமான போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுக்கப்பட்டனர்.இந்த பிரச்சனை தொடர்பாக டி.ஐ.ஜி திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக இரு கிராமங்களை சேர்ந்த சுமார் 42 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்பு அவர்கள் திருச்சி சிறையிலும் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here