தற்போது :ஏரல் அருகே வாலிபர் கொலை

0
1948

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் கிராமத்தில் வசிப்பவர் வெற்றிவேல் இவரது மகன் அஜித்குமார் (21). இவர் இன்று இரவு 8 மணி அளவில் மாரமங்கலம் கிராமத்தில் வைத்து மூன்று பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்த போது கடந்த 22 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் சரவணக்குமார் என்பவரை அரிவாளால் வெட்டி அஜித்குமார் கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கில் போலீசார் இவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர் இந்த வழக்கில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு அஜித் குமார் ஜாமினில் வெளியே வந்து உள்ளார். பின்னர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான அகரம் கிராமத்துக்கு வந்துள்ளார்.

இன்று மாறமங்கலம் கிராமத்திற்கு சென்று விட்டு தனது பைக்கில் அகரத்துக்கு திரும்பி வரும்போது சென்னையில் கொலை செய்யப்பட்ட சரவணகுமாரின் அக்கா கணவர் பாலமுருகன் என்பவர் மற்றும் தனது இரண்டு நண்பருடன் வந்து அஜித்குமாரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. அவர்கள் மூன்று பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள் இந்த சம்பவம் ஏரல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here