கர்நாடகாவில் முதல்வராக இருந்த குமாரசாமிக்கு எதிராக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. 17 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்தார். இதனால் 2023-ம் ஆண்டு வரை இந்த 17 பேரும் தேர்தலில் போட்டியிட முடியாது.
சபாநாயகரின் தகுதி நீக்க முடிவை எதிர்த்து 17 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம், கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.
ஆனால் உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அந்த 15 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.