சீனா வழிக்கு வரும்: டிரம்ப் உறுதி

0
573

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த ஓராண்டாக நிலவிவரும் வர்த்தக நிழல் யுத்தத்தால் இரு நாடுகளுமே பாதிப்படைந்துள்ளன. ஆனாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் நெடந்துகொள்கின்றன.
சமீபத்தில் அமெரிக்க பொருட்களுக்கான வரி விதிப்பை இரண்டாம் முறையாக சீனா அதிகரித்தது. இதனால், சீனாவோடு வர்த்தக தொடர்பை விடப்போவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையே நிலமை சற்று சுமூகமாகி வருகிறது. இதை தெரிவித்த டிரம்ப், ‘ அமெரிக்க வரி விதிப்பு சீனாவை கடுமையாக பாதித்துள்ளது. எனவே, வர்த்தக ஒபப்ந்தத்துக்கு வருவதை வேறு வழியில்லை’ என்று உறுதிபட கூறியுள்ளார்.
ஏற்கனவே, செப்டம்பரில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை தொடங்கும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here