கன்னியாகுமரி எஸ்.பி.ஸ்டாலின் காத்திருப்போர் பட்டியலுக்கு போனது ஏன்?

0
889

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமீபத்தில் பணியாற்றிய டாக்டர் ஸ்டாலின், 2020 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார்.

இதற்கு முன்பு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உட்கோட்டத்தில் தனது ஆரம்பக்கட்ட களப்பணிகளை மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகரத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றினார்.2025 ஜனவரி 3 அன்று கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் இவர், நேற்று தமிழக அரசால் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்புப் பட்டியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக திருநெல்வேலி மாநகர மேற்குப் பிரிவு துணை ஆணையராக இருந்த அன்சுல் நாகர் ஐ.பி.எஸ் கன்னியாகுமரி புதிய எஸ்பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனிமவள வாகனத் தடுப்பு மற்றும் அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றவர் ஸ்டாலின். வரன்முறையின்றி கேரளாவுக்கு கடத்தப்பட்ட கல், மண், தாது டாரஸ் லாரிகளை மடக்கிப் பிடித்து, இயற்கை வளங்களை காக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் குமரி மக்களுக்கு இவர் மீது ஈடுபாடு ஏற்பட்டது. இடை நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் ‘நிமிர்’ என்ற திட்டத்தையும், ‘ஊருக்கு ஒரு போலீஸ்’ என்ற பாதுகாப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டார். ஹெல்மெட் விழிப்புணர்வில் தீவிர முயற்சி எடுத்தார்.

இவ்வாறெல்லாம் மக்களிடம் நல்ல பெயர் எடுத்தாலும், கனிமவளக் கொள்ளையர்களும், கால நேரமின்றி மது வியாபாரம் பார்த்த ‘பார்’ உரிமையாளர்களும் இவர் மீது கோபத்தில் இருந்தனர். அதில் ஒரு பார் உரிமையாளர் ஒன்றிய கட்சியின் மாநில தலைவரின் உறவினர் என்பதால் அவரும், கனிமக் கடத்தலில் பணம் பார்த்த மற்றொரு பிரமுகரும் இவரை மாவட்டம் கடத்த நாள் பார்த்துக் காத்திருந்தனர்.

அவர்களுக்கு வாய்ப்பாக, எஸ் பி ஸ்டாலின் இளம் பெண்ணுடன் இருந்த வீடியோவும், புகைப்படங்களும் சிக்கின. ஆனந்தத்தில் தத்தளித்த இருவரும் அதை சென்னையில் உள்ள சவுக்கு சங்கர் உதவியுடன் வலைத்தளத்தின் பரப்ப, மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

எஸ் பி க்கு நிச்சயித்த பெண் ஒருவரை கடைசியில் அவர் மறுதலித்ததாகவும், அந்தப் பெண்ணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களே சங்கர் கையில் சிக்கியதாகவும் சிலர் கூறுகின்றனர். சங்கர் தரப்பிலோ, ” ஒன்றல்ல, நான்கு இளம் பெண்களின் புகைப்படங்கள், ஏராளமான வீடியோக்கள் இருக்கின்றன ” எனக் கூறப்படுகிறது.

சங்கர் மட்டுமல்ல, கன்னியாகுமரி மாவட்ட போலீசார் சிலரும் எஸ்.பி. இளம் பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களை ரகசியமாக பரப்பி வருகின்றனர். போலீசாரை நன்கு வேலை வாங்கியதால் அவர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டு, எஸ் பி ஐ கார் ஏற்றி அனுப்ப அவர்களும் காத்திருந்துள்ளனர் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

எதுவாயினும், திறமையாக செயல்பட்டு பொதுமக்களிடம் நற்பெயர் ஈட்டிய ஓர் அதிகாரி, மோசமான குற்றச்சாட்டுக்கு ஆளாகி பதவி விலக்கப்படுவது சிந்திக்க தகுந்ததாக உள்ளது. பொது வாழ்வில் இருப்பவர்கள் தனி வாழ்விலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதற்கேற்ற விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. மேலும், மக்களுடன் நெருங்கி பழகுவது கடமை என்றாலும், அதை ரீல்ஸ் போன்றவை மூலம் வெளிப்படுத்துவதில் ஓர் அதிகாரி அக்கறை காட்ட வேண்டியது இல்லை என்பதும் எஸ் பி ஸ்டாலின் செயல்பாடு மூலம் தெரிய வருகிறது. ஏனெனில், சமூக வலைத்தளம் இருபுறமும் கூர் உள்ள கத்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here