திருச்செந்தூரில் சானிடைசர் குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மதுப் பிரியர்களுக்கு சானிடைசர் வழங்க கூடாது என மருந்தக உரிமையாளர்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமையில் மருந்தக உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், பிரியர்களுக்கு சானிடைசர் வழங்கக்கூடாது, எனவும் சானிடைசர் வாங்க வருபவர்களிடம் உரிய விசாரணை மேற்கொண்டு குறைந்த அளவிலான சானிடைசர் பாட்டில்களை மட்டுமே வழங்கவேண்டும் மருத்துவரின் சீட்டு இல்லாமல் வருபவர்களுக்கு மருந்துகளை வழங்கக்கூடாது . இதனை மீறும் மருந்து கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார் . இந்த ஆலோசனை கூட்டத்தில் அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் மற்றும் மருந்தக உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.













