சாத்தான்குளம் அருகே தனியார் பேருந்து சிறை பிடிக்க முயற்சி – அதிகாரிகள் சமரசம்…!

0
1216

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தனியார் பேருந்து ஒன்று தினமும் நெல்லையிலிருந்து பெரியதாழை கிராமத்திற்கு வந்து சென்றது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த பேருந்து பெரியதாழை வரை இயக்கப்படவில்லை. இதனை கண்டித்து சாஸ்தாவிநல்லூர் விவசாய நல சங்க செயலாளர் லூர்து மணி தலைமையிலான பொதுமக்கள் பேருந்தை முற்றுகையிட முயன்றனர். அதனைத் தொடர்ந்து காவல் உதவியாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த பேருந்தில் ஏறி பொதுமக்கள் பெரியதாழை வரை பயணம் செய்தனர். அப்போது பெரியதாழை அருகே வந்தபோது படுக்கப்பத்து கிராமத்தில் நீண்ட நாள் கழித்து பேருந்து அப்பகுதிக்கு வந்ததால் பொதுமக்கள் ஓட்டுனர் நடத்துனர் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி பேருந்தை வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here