சாத்தான்குளம் அருகே சாலைப் பள்ளத்தில் சரிந்த அரசு பஸ்

0
787

பஸ் வசதிக்கு அடிப்படை சாலை வசதி. அந்த விடயத்தில் நெடுஞ்சாலை துறையினர் உதவினால் மட்டுமே ஊரூருக்கு பிரயாணம் செய்ய முடியும்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பிள்ளையார் கோயில் பக்கம் சாலையில் பெரும் பள்ளம் ஆண்டுக் கணக்கில் உள்ளது. அதில் இன்று மாலை ஆறு முப்பது மணி அளவில் அந்த வழியாக வந்த தங்கப் பறவை அரசுப் பேருந்து சரிந்து விட, பயணிகளும் ஊர் மக்களும் கஷ்டப்பட்டு தள்ளி சாலையில் சேர்த்திருக்கிறார்கள்.

இனிமேல் பஸ் பள்ளத்தில் விழுந்தால் நெடுஞ்சாலை துறையினர் தான் வந்து தள்ள வேண்டும் என்று இதுவரை கோரிக்கை வைத்து ஓய்ந்து போன மக்கள் கோபத்துடன் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here