தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில் பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் இரு நாட்களுக்கு முன்பு தனது அலுவலகத்தில் மணல் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஜமால் உள்ளிட்ட காவல்துறையினரின் தொடர்பு அவர்கள் மணல் கொள்ளையர்களுடன் நட்பு பாராட்டி விஏஓ குறித்து கூறியதால் ஆத்திரமடைந்தே இந்தக் கொலையை செய்துள்ளனர் என்று தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர், அதன் பொதுச்செயலாளர் இதழாளர் அய்கோ தலைமையில் கள ஆய்வு மேற்கொண்டு, அரசுசுக்கும் வருவாய் காவல் அதிகாரிகளுக்கும் மனு அனுப்பினர்.
இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட தெற்கு மண்டல டிஐஜி அஸ்ரா கர்க், விஏஓ கொலை வழக்கு விசாரணையில் இருந்து இன்ஸ்பெக்டர் ஜமாாலை விடுவித்து, ரூரல் டிஎஸ்பி சுரேஷை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளார்
ஒரு பொதுநல மக்கள் அமைப்பின் கோரிக்கையை ஏற்று, துரிதமான நடவடிக்கை எடுத்த தென்மண்டல டி ஐ ஜி அஸ்ரா கர்க்குக்கு தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.








