சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் குடும்பத்திற்கு 3 மாதத்திற்கு தேவையான அரசு நிவாரண பொருட்கள் வழங்கல்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சுடலை (26) என்ற வாலிபர் கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு அப்பகுதியில் நடந்த பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அரசு நிவாரணமாக வழங்கப்படும் மூன்று மாத கால தேவைக்கு பயன்படுத்தக்கூடிய மளிகை பொருட்களை இன்று வட்டாட்சியர் ராஜேஸ்வரி வழங்கினார்.







