தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றான திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.