காஷ்மீர் விவகாரம்… ஐநா தலையிடக்கூடாது ரஷ்யா

0
727

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்துள்ளது. காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

காஷ்மீரில் நடந்த மாற்றங்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்ட வேண்டும் என்று கவுன்சிலின் தலைவர் ஜோயன்னா ரானெக்காவுக்கு குரேஷி கடிதம் எழுதினார்.

இந்நிலையில், பாகிஸ்தான், சீனா ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. மூடிய அறைக்குள் ரகசியமாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்த ஆலோசகராக இருக்கும் பிரிட்டன், சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு ஆகிய நாடுகளின் பிரநிதிகளும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலையிடக்கூடாது என்று நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றான ரஷ்யா தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here