தூத்துகுடியில் கன மழை காரணமாக நகரின் பல இடங்களில் தெருக்களில் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.
இந்நிலையில், சென்னையிலிருந்து அவசரமாக தூத்துக்குடி வந்த எம்.பி. கனிமொழி மழை வெள்ளம் புகுந்த தெருக்களுக்கு சென்று பார்வையிட்டதோடு, அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினார்.