சாத்தான்குளம் காந்தி நகரில் சுடலை என்ற வாலிபரை சிலர் இன்று சிறிது நேரத்திற்கு முன்பு அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
டாஸ்மாக் ஒயின்ஷாப்பில் நடந்த தகராறில் வாலிபர் மூன்று பேர் கொண்ட கும்பலால் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உறவினர்கள் மறியல் செய்த நிலையில் போலீசாரின் சமாதான பேச்சு வார்த்தைக்கு பின்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.
சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் சாத்தான்குளம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.









