கட்டும்போதே இடிந்த மதுரை பாலத்தை என்.ஐ.டி பேராசிரியர் குழு ஆய்வு

0
717

மதுரை புது நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் ஒரு பகுதி கடந்த 28ஆம் தேதி மாலை இடிந்து விபத்திற்கு உள்ளானதில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரத்தில் இதுவரை மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஜே எம்சி புராஜக்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின், கட்டுமானப்பணிகள் பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின்கள் ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

விபத்திற்கான காரணம் குறித்து திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார். இந்நிலையில், திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் குழுவினர் பாஸ்கர் இன்று நாரயரணபுரம் அருகே விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். இக்குழுவினர் விபத்திற்கு காரணமாக கூறப்படும் ஹைட்ராலிக் ஜாக்கியின் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here