இன்று காலை கடையநல்லூரில் உள்ள தந்தி நிருபர் சுலைமான் கைபேசி எண்ணுக்கு சுகாதாரப் பணிகள் மாவட்ட இணை இயக்குநர் பிரேமலதாவின் கைபேசி எண்ணிலிருந்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், ” எனக்கு 50,000 ரூபாய் அவசரமாக தேவைப்படுகிறது” என கேட்கப்பட்டிருந்தது. இதனால் பதற்றமடைந்த சுலைமான் பணம் அனுப்ப முயன்றுள்ளார். அப்போது அவரது மகள்,’ இது போலி தகவலாக இருக்கலாம்” என்று எச்சரித்ததால் உடனடியாக சுகாதார துறை இணை இயக்குனரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன்பின்பே தனது கைபேசி ஹேக் செய்யப்பட்டிருந்தது சுகாதாரத்துறை இணை இயக்குனருக்கு தெரிந்துள்ளது.

இதை போல் மேலும் பலருக்கும் பணம் கேட்டு குறுந்தகவல் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து சைபர் கிரைம் பிராஞ்சுக்கு புகார் செய்ய, அவர்கள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.













