தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஒரு நாள் முழுவதும் அந்த வட்டத்தில் தங்கி இருந்து அனைத்து துறை அதிகாரிகளுடன் பொதுமக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண உள்ளார். எனவே அன்றைய தினம் பொதுமக்கள் தங்களது மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.









