பணகுடியில் வெடித்த மர்ம பொருள்- வெடிகுண்டா என ஆய்வு

0
324

.

நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த சொக்கலிங்கபுரம் பகுதியில் பயங்கர சத்ததுடன் மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறி அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் போல காட்சி அளித்தது. இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்தனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

வெடித்து சிதறிய மர்ம பொருள் நாட்டு வெடிகுண்டா அல்லது வேறு எதேனும் மர்ம பொருளா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here