கூட்டுறவு அனைத்து பணியாளர் சங்கத்தின் (டாக்பியா ) தென்மண்டல கூட்டம் மாவட்ட ச் செயலாளர் ஆசிரிய தேவன் முன்னிலையில் மதுரையில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியனும் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்விற்கு பின்னர்
செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன், ‘ வருகின்ற 7.3.2022 முதல் கூட்டுறவு ஊழியர் சங்கங்களின் சார்பில் ரேஷன் கடை சாவிகளை மண்டல இணைப்
பதிவாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்றார் .
கடந்த 2011 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஓய்வூதியம் பற்றி அரசு உத்தரவு வெளியிட்ட பின்னரும் அமல்படுத்தப்
படவில்லை . ரேஷன் கடை விற்பனையாளர்கள், மற்றும் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல் அகவிலைப்படி வழங்க வேண்டும் . தற்போது அறிவிக்கப்பட்ட 14 சதவீத அகவிலைப்படி விற்பனையாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக அளித்திட வேண்டும்.
5 பவுன் நகை கடன் தள்ளுபடி திட்டத்தை பொறுத்தவரை இறுதி பயனாளிகள் பட்டியலை உடனடியாக வெளியிட்டு, பட்டியலின் அடிப்படையில் உள்ள தொகையினை கூட்டுறவு சங்கங்களுக்கு விடுவித்து, அதன் பின்னர் பயனாளிகளுக்கு நகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார்.














