திருமங்கலம் அருகே 340 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது – கார், பைக் பறிமுதல்

0
839

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் பகுதியில், சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சோதனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, நான்கு சக்கர வாகனத்தில், 4 பேர் கொண்ட கும்பல் 340 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தனர். தனிப்படை போலீசார், காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்தும், 4 பேரையும் கைது செய்தனர்.


இந்த கடத்தல் தொடர்பாக ,கூடல்நகர் பகுதியைச் தெய்வம், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார், ரமேஷ் மற்றும் மதுரை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் போலீசார் ஆஸ்டின்பட்டி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here