குலசை – திருச்செந்தூர் இடையே சூசைநகர் அருகில் இரவு 11.30 மணி அளவில் வேகமாக சென்ற கார் குப்புற கவிழ்ந்ததில் வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரது தலையில் பலத்த அடி.
மேலும் இருவர் காயமின்றி தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சிவலூர் இளைஞர்கள் காயம்பட்டவர்களை மீட்டு திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளனர்.









