தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுரு என்பவரின் மகன் சிவபெருமாள் (28) என்பவர் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விரக்தியில் இருந்து வந்த அவர் அக்கம்பக்கத்தில் எவரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அவர் தூக்கில் தொங்கி 4 நாட்களுக்கு மேல் ஆனதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சாத்தான்குளம் எஸ்ஐ டேவிட், எஸ்ஐ எட்வின் தலைமையிலான போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







