நாங்குநேரியில் நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது காங்கிரஸ் உட்பூசல். பணம் படைத்தோர்க்கே வாய்ப்பு, வெளியூர்க்காரருக்கே சீட் தாரை வார்ப்பு என்று குமுறுகிறார்கள் உள்ளூர் கதர்சட்டைக்காரர்கள். வசந்தகுமார் வாக்கு மாறிவிட்டதாகவும் வெதும்புகிறார்கள்.
அது என்ன புதுக்கதை என்று கேட்டால், சீட்டு கொடுக்கும் முன்பு தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி முன்பு நடந்த செயல்வீரர் கூட்டத்தை சுட்டிக்காட்டுகிறார்கள்.
நாங்குநேரியில் நடந்த அந்த செயல்வீரர் கூட்டத்தில் பணம் இல்லாத ஒரே காரணத்துக்காக நாங்குநேரியில் சொந்த தொகுதிக்காரர்கள் புறக்கணிக்கபப்டுவதாக பலரும் குமுறினர்.
தனுஷ்கோடி ஆதித்தனின் உறவினர் ராஜேஷ், ‘ பணம் இல்லாததற்காக ஒதுக்குகிறீர்களே,எவ்ளியிடம் போய் சம்பாதித்து 10, 20 வருடம் கழித்து வந்தால் டீச் தருவீர்களா?’ என்றுகேட்டார். மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், ‘ பிரச்னைக்கு வசந்த குமாரும் ஒரு காரணம். எனவே, கட்சி வேட்பாளரை ஜெயிக்க வைக்கும் பொறுப்பை அவரே ஏற்கவேண்டும்’ என்றார்.
வசந்தகுமார் பேசியபோது, ‘ என்னை குற்ரம் சொல்பவர்கள் பலர் என்னிடம் வாங்கி சாப்பிட்டவர்கள்தாம்’ என்று ஒரு வாங்கு வாங்கிவிட்டு, ‘ எனது குடும்பத்தினர், உறவினருக்கு சீட் கேட்கமாட்டோம்’ என்றார். அதே கூட்டத்தில் இருந்த அவரது மைத்துனர் காமராஜும் நான் சீட் கேட்கமாட்டேன் என்று உறுதியாக பேசினார்.
எல்லாம் சரிதான், இதில் வசந்தகுமாரின் வாக்கு மாறித்தனம் எங்கு இருக்கிறது என்று கேட்டால், அவரது மைத்துனர் ரவியோடு சம்பந்தம் கலந்த உறவினர்தான் வேட்பாளர் ரூபி மனோகரனாம்.














