நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்ததற்கு நன்றி தெரிவிக்க தூத்துக்குடி எம்பி கனிமொழி நாசரேத்துக்கு வந்தார்பேருந்து நிலையம் முன்பு திறந்த வேனில் நின்று நன்றி தெரிவித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவை சேர்ந்த பீட்டர் என்பவர் எம் பி கனிமொழியிடம் சத்தத்தை உயர்த்தி கோரிக்கை ஒன்றை வைத்தார். இதனால் கனிமொழி சிறிது அப்செட் ஆனார்.
அதைத்தொடர்ந்து, ‘ நாசரேத் பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்துகள் முற்றிலும் கடந்த நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.அதில் பல பேருந்துகள் மாற்றுத் தடத்தில் இயங்குகின்றன. நீங்கள் நாசரேத், உடன்குடி சாத்தான்குளம் பகுதி வாக்காளர்கள் பயன் பெறும் வகையில் நிறுத்தப்பட்ட அனைத்து அரசு விரைவு பேருந்துகளையும் உடனடியாக இயக்க உத்தரவிட வேண்டும்’ என பீட்டர் பிரச்சனையை விளக்கினார். அதன் பின்பு மெல்ல புன்னகைத்த கனிமொழி, கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிவிட்டு நன்றி அறிவிப்பை தொடர்ந்தார்