தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பலபத்திரராமபுரம் அருகே சின்ன கோவிலாங்குளத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரை கள்ளத் தொடர்பின் காரணமாக இளங்கோவனின் மனைவியுடன் சேர்ந்து கொலை செய்த சண்முகநல்லூரை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் சுரேஷ்குமார் (எ)சுரேஷ் வயது-(40) என்ற நபரை பிரிவு -14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஊத்துமலை காவல் ஆய்வாளர் சுரேஷ்க்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ அறிவுறுத்தியதன் பேரில்,மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில்,மேற்படி சுரேஷ்குமார் (எ) சுரேசுக்கான தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் சுரேஷ் அளித்தார்.












