தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் சாலையில் தனியார் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் கோவில்பட்டியில் இருந்து ஜமீன் தேவர்குளம் செல்லும் தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் வந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்துள்ளார். இறந்தவர்களின் விபரம் குறித்து இதுவரை தெரியவில்லை.

விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் மற்றும் போலீசார் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.