சாத்தான்குளத்தில் வீடு புகுந்து விஏஓ மனைவியின் தாலி சங்கிலியை பறிக்கவும் குழந்தையை கடத்தவும் முயன்ற பெண்ணை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். மனநலம் பாதித்தவர் என்று கூறி அவரை கைது செய்ய போலீசார் மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தான்குளம் ஓடைக்கார தெருவை சேர்ந்தவர் சுபாஷ். கிராம நிர்வாக அலுவலரான இவரது மனைவி பெயர் புலமாடி சாரு. இன்று பிற்பகலில் இவர்களது வீட்டில் புகுந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புலமாடி சாருவின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கலியை பறிக்க முயன்றார். அவர் கத்தி கூச்சலிடவும் தொட்டிலில் கிடந்த 2.6 வயது குழந்தை கனிஷ்காவை தூக்கிக் கொண்டு ஓடியுள்ளார்.
ஆனால் போலீசார் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், காப்பகத்தில் சேர்க்க போவதாகவும் கூறினர். விஏஓ உறவினர்களோ, அவரை கைது செய்ய வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து அவரை பிடிப்பதற்கு சுபாஷ் உறவினர்கள் பின்தொடர்ந்தனர். பொதுமக்கள் உதவியுடன் ஐஓபி வங்கி அருகே மடக்கி பிடித்து சாத்தான்குளம் போலீசில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அங்கு நாசரேத் பகுதியைச் சார்ந்த மனநல காப்பகத்தார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை பரிசோதித்து நல்ல மனநிலையில் இருப்பதாக கூறினர்.
இதனால் மீண்டும் போலீசார் மற்றும் விஏஓ உறவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வருவாய் உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கைது பற்றி ஆலோசித்து வருகின்றனர்.









